Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
இன்றைய சமுதாயம்

பொறியில் சிக்கிய எலி

பொறியில் சிக்கிய எலி

பணத்திற்காக வாக்களிக்கும் அனைவருமே பொறியில் சிக்கிய எலி தான் ஏன் என்று கேட்டால் இப்போது பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்குவது என்பது சுலபமாகிவிட்டது. ஒரு நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை பணத்தை கொடுத்து வாங்குவதா, நீங்களே யோசித்து பாருங்கள் இது சரியா தவறா என்று. நம் நாட்டை ஆள வேண்டும் என்றால் முதலில் அவனுக்கு தகுதி இருக்க வேண்டும். தகுதி என்பது மக்களுக்கு எது நன்மையோ அதை தேடிச் சென்று அவனை செய்து முடிப்பவன்தான் தகுதியானவன். நாட்டின் நலன் கருதி எப்படி செய்தால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று யோசித்து செய்பவனே நம் நாட்டின் தலைவன்.

இது போன்ற தலைவரை தேர்ந்தெடுக்க அதற்காகத்தான் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்போது இருக்கும் மக்கள் பணத்தை வாங்கிகொண்டு அவர்களின் ஓட்டை விற்று  கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலம் தவறான தலைவனை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தவறான தலைவனை தேர்ந்தெடுக்கப்பட்டு தவறான கல்விமுறையும் தவறான மருத்துவம் தவறான வழிமுறை என்று நம் நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. இதை சரிசெய்ய வேண்டுமென்றால் முக்கியமாக நம் தலைவனை சரியாக தேர்ந்தெடுப்பதில் சரியாக இருக்க வேண்டும். முடிந்த வரையில் உங்களுக்கு சுயநலத்திற்காக தேர்ந்தெடுக்காமல் நாம் நாட்டு நலனிற்காக தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு போடும் ஓட்டினால் பலரும் கஷ்டப்படுகின்றனர் இதனால் நிறைய இழப்புகளும் துன்பங்களும் நடக்கின்றன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அரசியல்வாதிகள் அவர்களின் சுயநலத்திற்காக பணத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பணத்தை சேர்ப்பது இவர்களுக்கு மட்டுமில்லை இவர்களில் நான்கு தலைமுறைக்கும் சேர்த்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பற்றியெல்லாம் கேட்பவர்கள் யாரும் இல்லை என்பதற்காக அவர்கள் தங்களின் சொத்துக்களைக் குவித்துக் கொண்டே போகின்றார்கள்.

உங்களுக்கு தைரியம் இல்லை என்று யோசித்தால் நீங்கள் தட்டிக் கேட்க வேண்டாம் அதற்கு அவசியமும் இல்லை. நீங்கள் போடும் ஓட்டை சரியானவர்களுக்கு தேர்ந்தெடுத்து சரியாக போட்டால் கண்டிப்பாக நாம் நாடு முன்னேறும். தயவுசெய்து காசுக்காக உங்களது ஓட்டை விக்காதீர்கள். உங்களது ஓட்டு முக்கியத்தை நீங்கள் அறிந்தாலே போதும் நம் நாட்டில் வளர்ச்சிப்பாதையில் செல்லும். நீங்கள் போடும் ஒரு ஓட்டில் இந்த நாடும் இந்த நாட்டு மக்களின் தலையெழுத்து இருக்கிறது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணரவேண்டும், உணர்ந்து பணத்தை வாங்காமல் நேர்மையாக ஓட்டளிக்க வேண்டும் என்று நியூ தமிழன்டா கேட்டுகொள்கிறது.

Show More

newtamilanda

Hello this is raja. i love blogging and also make a cool website. newtamilanda is created for creating online awareness in india. posts will be updated when i have a free time.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button